Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜனநாயகக் கடமைக்காக விடாமுயற்சி ஷூட்டிங்கை தள்ளிப்போட்ட அஜித்?

ஜனநாயகக் கடமைக்காக விடாமுயற்சி ஷூட்டிங்கை தள்ளிப்போட்ட அஜித்?

vinoth

, சனி, 6 ஏப்ரல் 2024 (08:15 IST)
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது.  அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.  இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்து வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் விடாமுயற்சி ஷூட்டிங்கின் போது நடந்த விபத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த வீடியோவை வைத்து விடாமுயற்சி தி பிரேக்டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் காப்பி என கருத்துகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அஜித் தேர்தல் முடிந்ததும் தொடங்கலாம் எனக் கூறியுள்ளாராம். அதனால் ஏப்ரல் இறுதியில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கலாம் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் ‘குட் பேட் அக்லி’ ஷூட்டிங் எப்போது?... வேலைகள் தொடக்கம்!