Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிவுக்கு வந்த லைகா அஜித் பிரச்சனை… விடாமுயற்சி ஷூட்டிங் எப்போது?

vinoth
ஞாயிறு, 16 ஜூன் 2024 (07:10 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதனால் அஜித் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க தொடங்கினார்.  இந்நிலையில் இப்போது விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஜூன் 20 ஆம் தேதி படக்குழு அஜர்பைஜானுக்கு செல்ல உள்ள நிலையில் அஜித், திரிஷா மற்றும் ரெஜினா சம்மந்தப்பட்ட காட்சிகளை அங்கு படமாக்க உள்ளார்களாம்.

இதற்காக அனைத்து நடிகர்களின் கால்ஷீட்டையும் பட நிறுவனம் வாங்க, அஜித் ஷூட்டிங்கை கண்டுகொள்ள மறுக்கிறாராம். அதற்குக் காரணம் லைகா நிறுவனம் மாதாமாதம் அஜித்துக்கு தரவேண்டிய சம்பள பணமான 5 கோடி ரூபாயைக் கொடுக்கவில்லையாம். அதைக் கொடுத்தால்தான் ஷூட்டிங் வருவேன் என அஜித் பிடிவாதமாக இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அஜித் சமாதானமடைந்துள்ளாராம்.

இதையடுத்து அவர் விரைவில் அஜர்பைஸானுக்கு ஷூட்டிங் செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு 10 நாட்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு, பின்னர் சில நாட்கள் மட்டும் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா வந்து மீண்டும் அஜர்பைனான் திரும்புவாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னை தேனாம்பேட்டையில் நயன்தாரா தொடங்கிய புதிய பிசினஸ்.. லாபம் குவிய போகுது..!

அஜித் போலவே கார் ரேஸ் பயிற்சி பெறும் நாக சைதன்யாவின் புது மனைவி.. வைரல் புகைப்படஙக்ள்..!

நகைச்சுவை நடிகை பிந்துகோஷ் காலமானார். திரையுலகினர் இரங்கல்..!

கிரிக்கெட் மேட்ச் போல் பீச்சில் திரையிடப்பட்ட சிம்பு திரைப்படம்.. ரசிகர்கள் குஷி..!

மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்.. உடல்நிலை குறித்து மகன் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments