Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அர்ஜுனால் மீண்டும் தாமதம் ஆகிறதா விடாமுயற்சி ஷூட்டிங்?

அர்ஜுனால் மீண்டும் தாமதம் ஆகிறதா விடாமுயற்சி ஷூட்டிங்?

vinoth

, செவ்வாய், 11 ஜூன் 2024 (11:39 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதனால் அஜித் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க தொடங்கினார்.  இந்நிலையில் இப்போது விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஜூன் 20 ஆம் தேதி படக்குழு அஜர்பைஜானுக்கு செல்ல உள்ள நிலையில் அஜித், திரிஷா மற்றும் ரெஜினா சம்மந்தப்பட்ட காட்சிகளை அங்கு படமாக்க உள்ளார்களாம்.

முதலில் ஷூட்டிங்கை ஜூன் முதல் வாரத்திலேயே திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் படத்தில் வில்லனாக நடிக்கும் அர்ஜுன் தன் மகள் திருமணத்தில் பிஸியாக இருப்பதால் இப்போதைக்கு ஷூட் வரமுடியாது என சொல்லிவிட்டாராம். அதனால் தான் ஜூன் இறுதிக்கு தள்ளிவைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் எப்போது அப்படி சொன்னேன்… அதை நிரூபித்தால் நிர்வானமாக பீச்சில் நடக்கிறேன் –ஸ்ரீரெட்டி தடாலடி!