Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாமுயற்சி படத்தில் அஜித் கதாபாத்திரம் பற்றி வெளியான சுவாரஸ்ய தகவல்!

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2024 (09:47 IST)
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது.  அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் சமீபத்தில்தான் ஷூட்டிங் தொடங்கியது.

விடாமுயற்சி படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை மட்டும் சுமார் 250 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது படத்தின் பட்ஜெட்டில் சுமார் 70 சதவீதம் அளவுக்கு என சொல்லப்படுகிறது. இதனால் இந்த படம் அஜித் சினிமா வாழ்க்கையில் மிக அதிக தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்ட படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அஜித் இந்த படத்தில் நடித்து வரும் கதாபாத்திரம் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தில் அஜித் ‘அர்ஜுன்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக சமீபத்தைய தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

ஒருவழியாக தான் இயக்கவுள்ள கில்லர் படத்தின் வேலைகளைத் தொடங்கிய எஸ் ஜே சூர்யா!

ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரத்தில் சாதனை படைத்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments