Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2023 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் வருமானம் 3500 கோடி ரூபாய்!

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2024 (09:35 IST)
தமிழ் சினிமாவுக்கு 2023 ஆம் ஆண்டு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு வெளியான 256 திரைப்படங்களில் 24 படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. இதில் 10க்கும் மேற்பட்டவை சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த ஆண்டில் தமிழ் சினிமா திரையரங்கம் மற்றும் டிஜிட்டல் உள்ளிட்ட தளங்களின் மூலம் வருவாயாக 3500 கோடி ரூபாயை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது 2022 ஆம் ஆண்டை விட அதிகமாகும். 2022 ஆம் ஆண்டு சுமார் 3000 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ் சினிமா வருவாய் ஈட்டியுள்ளது.

அதே போல 2021 ஆம் ஆண்டில் இருந்து படிப்படியாக ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகும் படங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் 6 படங்கள் மட்டுமே நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளன. இதனால் திரையரங்குகளுக்கு ஓடிடி ஒரு அச்சுறுத்தல் என்ற சூழல் மாறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்யின் ‘கோட்’ படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்வது யார்? அர்ச்சனா கல்பாத்தி அறிவிப்பு..!

'இந்தியன் 2’ படத்தை பார்த்துவிட்டு ‘டீன்ஸ்’ படத்தை பார்க்க வாருங்கள்: பார்த்திபன் வேண்டுகோள்..!

இந்தியா முழுவதும் ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் வெளியீட்டில் வரவேற்பைக் குவிக்கும், "ககனச்சாரி" திரைப்படம்!!

ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்.. உறுதி செய்த ஸ்ருதிஹாசன்..!

ஜூலை 12ல் ‘டீன்ஸ்’ ரிலீஸ்.. திடீரென போலீசில் புகார் அளித்த இயக்குனர் பார்த்திபன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments