Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாமுயற்சி படம் சென்சாருக்கு செல்வதில் தாமதம்… காரணம் என்ன?

vinoth
ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (09:53 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் படத்தின் டீசர் ரிலீஸானது.

சமீபத்தில் தாய்லாந்தில் இந்த படத்தின் ஷூட்டிங் ஒரு பாடல் காட்சியோடு நிறைவடைந்தது. இதையடுத்து டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘Sawadeeka’ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையே இந்த படம் சென்சார் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னும் மகிழ் திருமேனி எடிட்டிங் பணிகளை இறுதி செய்யாததால கடைசி நேரத்தில் தாமதம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே அடுத்த வாரத்தில் ஒரு நாளில் விடாமுயற்சி படம் சென்சார் செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments