Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு வழியாக பூசணிக்காய் உடைக்கப் போகும் விடாமுயற்சி படக்குழு!

Advertiesment
அஜித்

vinoth

, புதன், 14 ஆகஸ்ட் 2024 (09:15 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முடிந்தது.

இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதோடு மொத்த ஷூட்டிங்கும் முடியவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் அஸர்பைஜானுக்கு ஒருவாரம் ஷூட்டிங் செல்ல வேண்டும் என இயக்குனர் மகிழ் திருமேனி கூறியுள்ளாராம்.

இந்நிலையில் ஐதாராபாத்தில் நடந்து வரும் ஷூட்டிங் ஆகஸ்ட் 16 ஆம் தேதியோடு மொத்தமாக முடியவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பின்னர் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி படம் தீபாவளி ரிலீஸை இலக்காக வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமரன் படம் பார்த்த பின்னர் ரிஸ்க் எடுக்க தயாரான கமல்ஹாசன்!