Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாமுயற்சி படத்துடன் ஷங்கரின் கேம் சேஞ்சர் திரைப்படம்!

vinoth
வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (11:37 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கி நிறைவடைந்துள்ளது.

படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அர்ஜுன் விடாமுயற்சி திரைப்படம் டிசம்பரில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

டிசம்பர் தொடக்கத்தில் புஷ்பா 2 திரைப்படம் வெளியாக உள்ளதால், டிசம்பர் 20 ஆம் தேதிதான் விடாமுயற்சி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அதே தேதியில் ஷங்கரின் ‘கேம்சேஞ்சர்’ திரைப்படமும் வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் தமன் அறிவித்துள்ளார். கேம் சேஞ்சர் திரைப்படம் தெலுங்குப் படமாக உருவானாலும் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸாகிறது என்பதால் கணிசமான திரைகள் அதற்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'மார்கன்' திரைப்படம் மூலம் விஜய் ஆண்டனிக்கு வெற்றி கிடைத்ததா? திரை விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கண்ணப்பா’ தேறியதா? திரை விமர்சனம்..!

எம்ஜிஆரை வர்ணித்து கலைஞர் எழுதிய வரிகள்.. பதிலுக்கு எம்ஜிஆர் செய்த சம்பவம்! - சத்யராஜ் கலகல பேச்சு!

ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் க்ளிக்ஸ்!

கிளாமரஸ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ரைஸா வில்சன்!

அடுத்த கட்டுரையில்
Show comments