வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துவரும் படம் வலிமை. இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.
வரும் மே 1 ஆம் தேதி அஜித்குமாரின் பிறந்த நாளன்று வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாவதாக போனி கபூர் தெரிவித்தார்.
இந்நிலையில் வலிமை பட அப்டேட் நீண்ட நாட்களாக ரசிகர்கள் கேட்டு வருவதால் அவர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்க வலிமை படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
அதாவது மே 1 ஆம் தேதி வலிமை பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருடன் மோஷன் போஸ்டரும் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.