நான் யார் என்பதை மற்றவர்களின் கருத்துகள் வரையறுக்க அனுமதிக்க மாட்டேன் –அஜித்குமார் பேட்டி!

vinoth
புதன், 18 ஜூன் 2025 (11:53 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. தற்போது சினிமாவுக்கு வெளியே கார் பந்தயங்களிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார் அஜித்.

தற்போது கார் ரேஸ் பந்தயங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அஜித் சினிமாவிற்கு எப்படி நேரம் ஒதுக்கப் போகிறார் என்பது குறித்தக் கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனாலும் ஆண்டுக்கு ஒரு படம் தன்னிடம் இருந்து வரும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள அவர் “நான் யார் என்பதை மற்றவர்களின் கருத்துகள் (விமர்சனங்கள்) முடிவுசெய்ய நான் அனுமதிக்க மாட்டேன். நான் ஒரு சாதனையாளராக இருக்க விரும்புகிறேன். என் வாழ்க்கையை நான் திரும்பிப் பார்க்கும் போது.. நான் முயற்சித்தேன்… நான் என்னால் முடிந்த ஏதாவது ஒன்றை செய்தேன் என மகிழ்ச்சியடைய விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் ‘இட்லி கடை’ ஓடிடி ரிலீஸ்.. தேதி என்ன? எந்த ஓடிடி?

இந்திய மெகா சீரியலில் நடிக்கும் பில்கேட்ஸ்! உறுதிப்படுத்திய ஸ்மிருதி இரானி!

மனோரமா மகன், தேவா தம்பி.. ஒரே நாளில் தமிழ் திரையுலகில் 2 மரணங்கள்.. கண்ணீர் அஞ்சலி..!

பிரபல இசை நிறுவனத்தின் மேல் அதிருப்தியில் சந்தோஷ் நாராயணன்… என்ன காரணம்?

தெலுங்கில் நாளை ரிலீஸாகும் மாரி செல்வராஜின் ‘பைசன்’..!

அடுத்த கட்டுரையில்
Show comments