Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது இடத்தை பிடித்து இந்தியாவுக்கே பெருமை.. அஜித் அணிக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

Siva
திங்கள், 13 ஜனவரி 2025 (07:40 IST)
துபாயில் நடைபெற்று வரும் கார் ரேஸில் அஜித்தின் அணி மூன்றாவது இடத்தை பெற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ள நிலையில், அஜித்துக்கும் அவரது அணிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

துபாய் 24 ஹெச் கார் ரேஸில் அஜித்தின் அணி கலந்து கொண்டது என்ற நிலையில், இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விளையாட்டு ஆர்வலர்கள்  பெரும்பாலும் கிரிக்கெட்டை மட்டுமே ரசித்து வந்த நிலையில், அஜித் இந்த கார் ரேஸில் கலந்து கொண்டதன் காரணமாக கார் ரேஸ்சை ரசிகர்கள் பார்க்க தொடங்கி விட்டனர்.

அஜித், அணி உரிமையாளராகவும் ஓட்டுனராகவும் இருப்பார் என்று கூறப்பட்ட நிலையில், அஜித்தின் அணி மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியது. ஒட்டுமொத்த தொடரில் 23வது இடம் பிடித்திருந்தது. மேலும், ஸ்பிரிட் ஆப் தி ரேஸ் என்ற விருதும் அஜித் அணிக்கு வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற அஜித், இந்திய தேசிய கொடியுடன் ரசிகர்களை சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், சக அணி வீரர்களுடன் அவர் டான்ஸ் ஆடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அஜித்தின் குடும்பமும் இந்த போட்டியை காண நேரில் வந்திருந்த நிலையில், குடும்பத்தினருடன் அவரின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில், அஜித் அணி மூன்றாவது இடம் பிடித்ததையடுத்து, அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

மஞ்சள் நிறமே… மஞ்சள் நிறமே… மாளவிகாவின் கலர்ஃபுல் போட்டோஸ்!

வார இறுதி நாட்களில் பிக்கப் ஆகும் பாலாவின் ‘வணங்கான்’… டிக்கெட் புக்கிங் அதிகரிப்பு!

என் படங்கள் சரியாக ஓடவில்லை… ஆனால் தவறு என்னுடையது இல்லை –ஜெயம் ரவி ஓபன் டாக்!

அதர்வாவின் ‘DNA’ படத்துக்கு ஐந்து இசையமைப்பாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments