பிரபல தமிழ் நடிகர் அஜித்குமார் ஓட்டிய ரேஸ் கார் விபத்துக்குள்ளான வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக உள்ள அஜித்குமார், நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், தனது விருப்பமான கார் ரேஸில் அடிக்கடி ஈடுபட்டு வருகிறார். இதற்காக அஜித்குமார் கார் ரேஸிங் என்ற நிறுவனத்தை தொடங்கிய அவர் பல நாடுகளிலும் நடக்கும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்துக் கொண்டு வருகிறார்.
அவ்வாறாக சமீபத்தில் அஜித்குமார் GT4 European Series கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துக் கொண்டார். அப்போது அவரது கார் வேகமாக சென்று விபத்துக்குள்ளானது. இந்த வீடியோவை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த விபத்தில் அஜித்குமார் எந்த காயங்களுமின்றி தப்பினார். எனினும் அஜித் கார் விபத்திற்குள்ளான சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K