அஜித்தின் அடுத்த பட சம்பளம் இத்தனை கோடியா? விஜய்யை நெருங்கிவிட்டாரா?

Siva
திங்கள், 16 ஜூன் 2025 (18:03 IST)
நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனின் சம்பள விவரங்கள் தற்போது கசிந்துள்ளன.
 
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'குட் பேட் அக்லி’ திரைப்படம், பெரும் வரவேற்பை பெற்றதுடன், தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தையும் ஈட்டியது. இந்த வெற்றியை தொடர்ந்து, அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த படத்தில் நடிக்க அஜித்துக்கு 180 கோடி ரூபாய் சம்பளமும், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 12 கோடி ரூபாய் சம்பளமும் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 270 முதல் 300 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அவருக்கு ஐந்து முதல் ஏழு கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது. இந்த பிரமாண்டப் படம், அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் ‘கைதி 2’ இல்லையா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments