அஜித் கதாநாயகனாக நடித்த குட் பேட் அக்லி திரைப்படம், ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் மிகுந்த கோலாகலத்துடன் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, இத்திரைப்படத்தின் முன்பதிவு கடந்த சில நாட்களாகவே ஆர்வத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி நடைபெறும் நிலைமை காரணமாக, தமிழ்நாட்டில் திரைபடம் திரையிடப்படும் முன்னரே விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் தோன்றிவிடுகின்றன.
இந்த விமர்சனங்கள் நேர்மறையாக இருந்தால், படம் குறித்து எதிர்பார்ப்பு கூடும். ஆனால் எதிர்மறையாக இருந்தால், தமிழ்நாட்டில் வசூல் பாதிக்கப்படும் என்ற அச்சம் உருவாகுகிறது.
இந்நிலையைக் கருத்தில் கொண்டு, மைத்திரி மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தீவிர முடிவெடுத்து, அனைத்து மாநிலங்களிலும் குட் பேட் அக்லி படத்தை ஒரே நேரத்தில் வெளியாக வேண்டும் என முடிவெடுத்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் முதல் காட்சியே மற்ற மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் காட்சிபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.