Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த சீனுக்கு ஹெல்மெட் வேணாம் என சொன்ன ஹெச் வினோத்- மறுத்த அஜித்!

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (14:55 IST)
வலிமை படம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

நடிகர் அஜித் நடித்து எச்.வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் வலிமை. போனி கபூர் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கி வருடங்கள் ஆகியும் படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்து வந்ததால் ரசிகர்கள் பலர் அப்டேட் கேட்டு அதை வைரலாக்கி வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் முதல் சிங்கிள் பாடலும் வெளியாகி பெரும் வைரலானது. இந்நிலையில் தற்போது வலிமை திரைப்படம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் போனிக்கபூர் வலிமை திரைப்படம் 2022ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்துள்ளார். வலிமை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் படத்தைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் முக்கியமாக ‘படத்தில் ஒரு காட்சியில் அஜித் பைக் ஓட்டும்போது , நான் இந்த சீனுக்கு ஹெல்மெட் வேண்டாம் சார். நீங்கள்தான் ஓட்டுகிறீர்கள் என ரசிகர்களுக்கு தெரியவேண்டும் எனக் கூறினேன். அதை மறுத்த அஜித் சினிமாவுக்காக ரூல்ஸை மாற்றக் கூடாது’ எனக் கூறியதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தேர்தலில் ஜெயித்தாலும் சினிமாவை விட்டு விலக முடியாது: கங்கனா ரனாவத்

குபேரா படத்துக்காக 10 மணிநேரம் படத்துக்காக ரிஸ்க் எடுத்து நடித்த தனுஷ்!

நியு ஏஜ் அன்பே சிவம் ‘ரோமியோ’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்!

வார இறுதி நாட்களில் வசூல் மழை பொழியும் அரண்மனை 4… மூன்று நாள் வசூல் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments