Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாக்டர் படத்தால் மீண்டும் கடனாளி ஆகும் சிவகார்த்திகேயன்!

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (14:47 IST)
டாக்டர் படத்தின் ரிலிஸ் சிக்கல் எழுந்த நிலையில் அதை தீர்ப்பதற்காக சிவகார்த்திகேயன் மீண்டும் கடனாளி ஆகியுள்ளாராம்.

ஏற்கனவே வேலைக்காரன், சீமராஜா மற்றும் ஹீரோ ஆகிய படங்களின் தோல்வியால் பல கோடிகள் கடனாளி ஆனார் சிவகார்த்திகேயன். இந்த கடன்களை அடைப்பதற்காக கே ஜே ஆர் ராஜேஷுக்கு சம்பளம் வாங்காமல சில படங்களை நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதையடுத்து ஒரு படமாக இன்று டாக்டர் ரிலிஸ் ஆகியுள்ளது.

ஆனால் இந்த படத்த்தின் ரிலீஸும் சுமூகமாக நடக்கவில்லையாம். படத்தின் மீது கடன் கொடுத்தவர்கள் கடைசி கட்டத்தில் நெருக்க அதனால் கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸுக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் வேறு வழியில்லாமல் உதயநிதி ஸ்டாலின் மூலமாக பிரச்சனையை சுமூகமாக தீர்க்க முயன்றுள்ளார்.

இதையடுத்து மதுரை அன்பு தரவேண்டிய 27 கோடியை உடனடியாக பைனான்சியர்களுக்கு கொடுத்துள்ளார். அதையடுத்துதான் படம் ரிலீஸாகியுள்ளதாம். ஏற்கனவே கடன் பிரச்சனைகளை தீர்க்கதான் வரிசையாக படங்களை நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இப்படி ஒவ்வொரு படத்தின் மூலமும் மேலும் கடனாளியாகி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

எந்த பக்கம் நீ நின்றாலும் அந்த பக்கம் கண்கள் போகும்… க்யூட் லுக்கில் சமந்தா அசத்தல்!

ஒரே நாளில் ரிலீஸாகும் அனுஷ்கா & ராஷ்மிகா படங்கள்!

ராகு காலத்தில்தான் எனக்குப் பேருவச்சாங்க… நான் என்ன உருப்படலயா? – சுந்தர்ராஜனின் லாஜிக் கேள்வி!

600 க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் நடிகர்களுக்கு காப்பீடு எடுத்துக் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments