Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்னேஷ் சிவன் பகிர்ந்த அஜித்தின் புகைப்படம் வைரல்

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (17:52 IST)
இயக்குனர் விக்னேஸ் சிவன் தன் டுவிட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்குமாரின் புகைப்படதை பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்பொது, ஹெச். வினோத் இயக்கத்தில், போனிகபூர் இயக்கத்தில், தொடர்ந்து 3 வது முறையாக கூட்டணி அமைத்துள்ள  நிலையில், இப்படத்தின் தலைப்பு துணி என்று உறுதி செய்யப்பட்டு, சமீபத்தில், இப்படத்தின் போஸ்டர்கள் வெளியானது.

அதனைத்தொடர்ந்து, முழுவீச்சில் படப்பிடிப்புகள்  நடந்த நிலையில், இன்றுடன் துணிவு படப்பிடிப்புகள் முடிந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இந்த நிலையில், அஜித்61 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பதாக  தகவல் வெளியானது.

தற்போது, திருமணம் முடிந்து, செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்ட பணிகளை எல்லாம் முடித்துவிட்டு, இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ள மகிழ்ச்சியில் இருக்கும்  விக்னேஷ் சிவன், அஜித்குமாருடன் தன் அடுத்த படத்தை தொடங்க தயாராகியுள்ளார்.

பிரமாண்டமான முறையில் உருவாகும் அஜித்62 படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவனின் சமீபத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படம் ஹிட் ஆன நிலையில், அஜித்62 படம் ஆக்சன் படமாக இருக்கும் என தெரிகிறது.

இன்று, தன் டிவிட்டர் பக்கத்தில்  நடிகர் அஜித்குமாரின் புகைப்படத்தைப் பகிர்ந்து, புயலுக்கு முன் அமைதி என்று குறிப்பிட்டுள்ளார். விரைவில் அஜித்62 படம் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

.இப்படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த 2 படங்கள் என மொத்தம் 3 படங்கள் லைகா புரொடெக்சனில் அஜித் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

ரஜினி பாணியை அப்படியே பின்பற்றிய இந்தி ஸ்டார் நடிகர்! - தடை விதித்த நீதிமன்றம்!

'இந்தியன் 2' புரமோசன் பணிகளை பிரமாண்டமாகத் துவக்கியது லைகா நிறுவனம்

5வது சூப்பர் ஸ்டார் & பைரவாவின் நண்பரான புஜ்ஜி 22 மே 2024 ல் அறிமுகமாகிறார்!!

மறுபடியும் பழைய சினிமாவை நோக்கி போயிட்டோம்! திரும்ப நடிக்க மாட்டேன்! - கமல்ஹாசன் ஓப்பன் டாக்!

'தேவரா' திரைப்படத்தில் இருந்து அனிருத் ரவிச்சந்தர் இசையில் முதல் சிங்கிள் 'ஃபியர்

அடுத்த கட்டுரையில்
Show comments