நடிகர் அஜித் அடுத்து தான் நடிக்கும் மூன்று படங்களுக்கான இயக்குனர்களை டிக் அடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அஜித்தின் வலிமை கிட்டத்தட்ட முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச் வினோத்தே இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான முன் தயாரிப்பு வேலைகளை வினோத் முடுக்கி விட்டுள்ளாராம். இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை சுதா கொங்கரா இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. சுதா கொங்கரா குறுகிய இடைவெளிகளில் அஜித்தை சந்தித்து கதை குறித்து விவாதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அதற்கடுத்து அஜித் தனது ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவாவுடன் மீண்டும் ஐந்தாவது முறையாக இணைய உள்ளாராம்.