அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்… வெளியான தகவல்!

vinoth
வியாழன், 14 மார்ச் 2024 (12:46 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து  வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில்  கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்த படத்தின் பூஜை சென்னையில் எளிமையாக நடந்ததாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக ஆதிக் ரவிச்சந்திரன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித்தின் விடாமுயற்சி படத்துக்கும் அனிருத்தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துக்க நிகழ்வுல கலந்துக்கக் கூட தகுதியில்லாத ஆளு! வடிவேலுவை இப்படி பேசுனவரு யாருப்பா?

Lik படத்தின் டிஜிட்டல் வியாபாரத்தில் மீண்டும் ஒரு சிக்கலா?... ரிலீஸ் தேதி மாறுமா?

கருப்பு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியையே மீண்டும் ஷூட் செய்கிறதா படக்குழு?

மூன்று நாட்களில் ‘காந்தா’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இணைந்த சாய் அப்யங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments