’விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த சுரேஷ் சந்திரா.. அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி..!

Mahendran
புதன், 19 ஜூன் 2024 (19:17 IST)
அஜித் நடித்த ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா உறுதி செய்துள்ளதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
அஜீத் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் விடாமுயற்சி. திரிஷா மற்றும் ரெஜினா நாயகிகளாக நடித்து வரும் இந்த படத்தில் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. 
 
மேலும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்வது உறுதி என்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் அஜர்பைஜான் சென்று விட்டனர் என்றும் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். 
 
ஏற்கனவே விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது சுரேஷ் சந்திரா அதனை உறுதி செய்துள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments