அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் குட் பேட் அக்லிஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கி நிறைவடைந்துள்ளது.
படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் படத்தின் டீசர் ரிலீஸானபோது அதன் ரிலீஸ் அடுத்த ஆண்டு பொங்கல் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் அஜித் தற்போது நடித்துவரும் குட் பேட் அக்லி படத்துக்காக அஜித் 8 கிலோ வரை எடை குறைத்துள்ளதாக தெரிகிறது. தற்போது ஸ்லிம்மான லுக்கில் அஜித் காணப்படும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.