பல படங்களில் முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்து வந்த சூரி, இப்போது வெற்றிமாறனின் விடுதலை படம் மூலமாக கதாநாயகன் ஆகியுள்ளார். இந்நிலையில் அடுத்து அவர் கதாநாயகனாக நடிக்கும் இரண்டு படங்கள் உருவாக்கத்தில் உள்ளன. தொடர்ந்து கதாநாயகனாகவும், நகைச்சுவை நடிகராகவும் நடிக்கும் எண்ணத்தில் உள்ளதாக சூரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சூரியின் சினிமா கேரியரில் மிக முக்கியமாக அமைந்த படமாக அஜித்தின் ஜி தான் அமைந்துள்ளது. பல படங்களில் துண்டு துக்கடா வேடத்தில் நடித்த சூரி, ஜி படத்திலும் ஒரு சிறிய வேடத்திலேயே நடித்திருந்தார். ஆனால் லிங்குசாமி அடுத்து தயாரித்த தீபாவளி படத்தில் அவருக்கு வாய்ப்புக் கொடுத்தார் இயக்குனர் எழில். அந்த படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சுசீந்தரன், சூரியுடன் பழக்கமாகி வெண்ணிலா கபடி குழு படத்தில் வாய்ப்பளித்தார். அந்த படத்தின் மூலம் கவனம் பெற்ற சூரி, அடுத்தடுத்து பல படங்களின் வாய்ப்பைப் பெற்றார்.