Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''அஜித்63'' படத்தின் இயக்குனர் அட்லீ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

''அஜித்63'' படத்தின் இயக்குனர் அட்லீ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
, வெள்ளி, 27 ஜனவரி 2023 (15:52 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில், சமீபத்தில் வெளியான படம் துணிவு.

இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். தொடர்ந்து மூன்று படங்கள் அவருடன் பணியாற்றிய நிலையில், அடுத்து, அஜித்62 படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தை அடுத்து, அட்லீயின் இயக்கத்தில்  அஜித் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அஜித் 62 பட ஷூட்டிங்  முடிந்த பின்பு,  அட்லீ-  அஜித் இணையும் அஜித்63 படம்  தொடங்கப்படும் என தெரிகிறது.

ஏற்கனவே ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், ஆகிய படங்களைத் தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்  நடிப்பில் ஜவான் படத்தை அட்லீ தற்போது, இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

எனவே, அஜித்- அட்லீ இணையும் காம்போ  நிச்சயம்  சூப்பர் ஹிட் அதிரடி ஆக்சனாக அமையலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பதான் படம் இரண்டு நாட்களில் ரூ.220 கோடி வசூல்