அஜித்தின் வலிமை படத்தின் தீம் மியூசிக் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் அந்த தீம் மியூசிக் வெளியாக இணையதளங்களில் வைரலாகி வருகிறது
யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த தீம் மியூசிக் மிக சிறப்பாக இருப்பதாகவும் முதல் தடவை கேட்கும்போதே அட்டகாசமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தீம் மியூசிக் உடன் வெளியாகியுள்ள வீடியோவும் அதிலுள்ள அஜித்தின் அட்டகாசமான காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வலிமை திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில் இன்று தீம் மியூசிக் வெளியாகி உள்ளது இதனை அடுத்து டீசர் மற்றும் டிரைலர் உள்பட அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது