Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாமுயற்சி படத்தின் ஒட்டுமொத்த வசூலை மூன்றே நாளில் கடந்த ‘குட் பேட் அக்லி’!

vinoth
ஞாயிறு, 13 ஏப்ரல் 2025 (11:09 IST)
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில், இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

கேங்ஸ்டர் ஆக இருக்கும் அஜித், தனது மனைவி திரிஷா சொன்ன காரணத்திற்காக ஜெயிலுக்கு போகிறார். மகனின் பதினெட்டாவது பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று ஜெயிலரின் உதவியுடன் வெளியே வரும் அஜித், தனது மகனை யாரோ கடத்திவிட்டார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். அதன் பின்னர் மகனை மீட்க அவர் மேற்கொள்ளும் போராட்டம்தான் கதை.

படம் இந்திய அளவில் முதல் நாளில் 28 முதல் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. வெளிநாட்டிலும் இந்த படத்துக்கு மிகப்பெரிய வசூல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம்  மூன்று நாட்களில் உலகளவில் செய்த வசூல் விடாமுயற்சி திரைப்படம் ஒட்டுமொத்தமாக செய்த வசூலைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜயகாந்த் மகனை வைத்து ‘கேப்டன் பிரபாகரன் 2’ எடுக்க ஆசை… நன்றிக்கடன் செலுத்தும் RK செல்வமணி!

ரஜினி & கமல் இணையும் படத்தைத் தயாரிக்கிறாரா இன்பநிதி ஸ்டாலின்?

4 மாதங்களில் முடிவுக்கு வரும் எஸ்.வி.சேகர் டிவி தொடர்.. மக்களிடம் வரவேற்பு இல்லையா?

பட்ஜெட் வெறும் ரூ.70 லட்சம்.. வசூலோ ரூ.70 கோடி.. திரைப்படம்ன்னா இப்படி இருக்கனும்..!

ரத்தக் காட்டேரியாக மாறும் ராஷ்மிகா!? கவனம் ஈர்க்கும் Thama Teaser!

அடுத்த கட்டுரையில்
Show comments