Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்பே.. ஆருயிரே..! – போனி கபூரை வாழ்த்தி போஸ்டர் ஒட்டிய தல ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (09:14 IST)
அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களாக கேட்டு வந்த வலிமை அப்டேட் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்த நிலையில் அவரை வாழ்த்தி அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் படம் வலிமை. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் இந்த படத்தையும் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையிலும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வராமல் இருந்த நிலையில் படக்குழுவினரிடம் அப்டேட் கேட்டு அலுத்து போன அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் மைதானம், அரசியல்வாதிகள் என ஒருவரை விடாமல் அப்டேட் கேட்டு வந்தனர்.

இந்நிலையில் மே 1 அஜித் பிறந்தநாளன்று வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட உள்ளதாக போனி கபூர் அறிவித்தது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்காக போனி கபூரை வாழ்த்தி பேனர் அடித்துள்ள மதுரை அஜித் ரசிகர்கள் அதில் “அன்பே.. அமுதே.. ஆருயிரே.. போனியே.. வலிமை அப்டேட் செய்த சாமியே!” என குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தில் பிஸி… கிங்டம் படத்தின் பின்னணி இசையை ‘அவுட்சோர்ஸ்’ செய்யும் அனிருத்!

பீரியட் படமாக உருவாகிறதா தனுஷ் & விக்னேஷ் ராஜா இணையும் படம்?

எந்த ஓடிடியிலும் இல்லாமல் நேரடியாக யுடியூபில் வெளியாகும் அமீர்கானின் ‘சிதாரா ஜமீன் பார்’!

அனிருத்துக்குப் போட்டியா சாய் அப்யங்கர்?… ரெண்டு பேரும் சேர்ந்து உருவாக்கி இருக்கும் பாட்டு!

லூசிஃபர் 3 பற்றி பரவிய வதந்தி… இயக்குனர் பிரித்விராஜ் மறுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments