Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித்தின் 25வது வருடத்தைக் கொண்டாடும் ரசிகர்கள்..

Advertiesment
அஜித்தின் 25வது வருடத்தைக் கொண்டாடும் ரசிகர்கள்..
, திங்கள், 31 ஜூலை 2017 (19:10 IST)
அஜித் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஆவதால், அதைக் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். 


 

 
பைக் மெக்கானிக்காக இருந்து, எந்தப் பின்புலமும் இல்லாமல் சினிமாவில் ஜெயித்திருப்பவர் அஜித். சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் பலருக்கும் அவர்தான் இன்ஸ்பிரேஷன். வெளிப்படையாகப் பேசுபவர், நடந்து கொள்பவர், துணிச்சல் மிகுந்தவர், தன்னை நம்பியவர்களுக்கு உதவுபவர், சினிமாவில் ரிஸ்க் எடுப்பவர் என அஜித்தைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அப்படியாப்பட்ட அஜித் சினிமாவுக்கு வந்து, 25 வருடங்கள் ஆகப் போகிறது.
 
அஜித்தின் முதல் படமான ‘அமராவதி’, 1993ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி ரிலீஸானது. அந்தப் படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில், 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி கையெழுத்திட்டார். அன்றுதான் அவருடைய சினிமா வாழ்க்கை ஆரம்பமானது. தற்போது 25 வருடங்களை நிறைவுசெய்ய இருக்கிறார் அஜித். அவர் நடித்துள்ள ‘விவேகம்’ படமும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாக இருப்பதால், அடுத்த மாதம் அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கப் போகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8 நிமிடத்திற்கு ரூ.20 கோடி: கெத்து காட்டும் எஸ்.ஜே. சூர்யா!!