Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலை வைக்கிறதெல்லாம் அஜித்துக்கு சுத்தமா பிடிக்காது: சிவா

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2017 (23:07 IST)
கடந்த இரண்டு நாட்களாகவே அஜித்துக்கு சிலை வைப்பது குறித்த செய்திகள் இணையதளங்களிலும் செய்தி ஊடகங்களிலும் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. நெல்லையில் ரூ.5 லட்சம் மதிப்பில் சிலையுடன் நூலகமும், கும்பகோணத்தில் ரூ.1 லட்சம் செலவில் சிலையும் அவரது ரசிகர்கள் வைக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.



 
 
இந்த நிலையில் அஜித்தின் பிரியத்துக்குரிய இயக்குனர் சிவாவிடம் இந்த சிலை விவகாரம் குறித்து கேட்டபோது, 'சிலை வைப்பதெல்லாம் அஜித்துக்கு சுத்தமா பிடிக்காது. அவர் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அம்மா, அப்பா, செய்யும் தொழில் இதை மூன்றையும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்
 
ரசிகர்களாக இருந்தாலும் சரி, தனது படத்தை பார்க்க வருபவர்கள் யாராக இருந்தாலும் சரி, படத்தை பார்த்து அதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் எடுத்து கொண்டு கடைபிடிக்க வேண்டும் என்பதுதான். இதைவிட்டு சிலை வைப்பதை அவர் கண்டிப்பாக விரும்ப மாட்டார்' என்று கூறினார். அஜித் ரசிகர்களுக்கு இது எப்போது புரியும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘பிக் பாஸ் 9’ நிகழ்ச்சிக்கு செல்லும் 2 ஹார்ட் பீட் நட்சத்திரங்கள்.. யார் யார்?

பனீர்க்கு பதிலாக ஸ்விகியில் வந்த சிக்கன்.. அடுத்த நொடியே வாந்தி! - சாக்‌ஷி அகர்வால் பரபரப்பு புகார்!

கருநிற உடையில் வெட்கத்தில் சிவந்த பிரியா வாரியர்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சேலையில் விண்டேஜ் லுக்கில் அசத்தல் போட்டோஷூட் நடத்திய ஜான்வி!

சூர்யாவின் ‘கருப்பு’ vs கார்த்தியின் ‘சர்தார் 2’… இணையத்தில் பரவும் புது தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments