Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரௌபதி படத்திற்கு வாழ்த்துக் கூறினாரா அஜித்? பரவி வரும் வதந்தியால் பரபரப்பு

Webdunia
திங்கள், 13 ஜனவரி 2020 (22:50 IST)
சமீபத்தில் வெளியான திரௌபதி படத்தின் டிரைலர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று ஒரு பிரிவினர் வலியுறுத்தி  வரும் நிலையில் இந்த படத்தை வெற்றிப் படமாக்கியே தீருவோம் என்று இன்னொரு பிரிவினர் கங்கணம் கட்டிக்கொண்டு, படம் ரிலீஸ் ஆகும் முன்னரே வாழ்த்து போஸ்டர்களை அடித்து ஒட்டிக் கொண்டிருக்கின்றனர். இதனால் இந்த படம் வெளிவந்தாலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஜி.மோகன் அவர்களை அழைத்து அஜித் பாராட்டியதாகவும், அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பொருந்துவது போல் ஜி.மோகன் மற்றும் அஜித் இணைந்து இருக்கும் ஒரு புகைப்படம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திரௌபதி படத்தின் இயக்னர் ஜி. மோகன் தனது டுவிட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: வதந்திகளை நம்பாதீர்.. திரெளபதி குறித்து தல எனக்கு எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை.. உலவும் புகைப்படம் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ரசிகராக அவருடன் எடுத்தது மட்டுமே’ என்று பதிவு செய்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'சூர்யா 45’ படத்தில் இணைந்த ‘கங்குவா’ நடிகர்.. இயக்குனர் ஆர்ஜே பாலாஜி அறிவிப்பு..!

25 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவைத் தொடங்கிய ராம்சரணின் ‘கேம்சேஞ்சர்’ படக்குழு!

மறைந்த நகைச்சுவைக் கலைஞரின் பயோபிக்கில் நடிக்கிறாரா தனுஷ்?

விடுதலை 2 படத்தை சிறுவர்கள் பார்க்கலாமா?... சென்சார் போர்டு அளித்த சான்றிதழ்!

சிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நிலை குறித்து கவலை… வழக்கு நடப்பதால் சந்திக்க முடியவில்லை – அல்லு அர்ஜுன் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments