இயக்குனருக்கு டார்ச்சர் கொடுக்கிறாரா அஜித்? பரவிய வதந்தி

திங்கள், 13 ஜனவரி 2020 (22:38 IST)
அஜித் நடித்த நேர்கொண்டபார்வை படத்தை இயக்கியபோது இயக்குனர் எச்.வினோத்துக்கும், அஜித்துக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாகவும் இருப்பினும் அந்த படம் ஒரு ரீமேக் படம்தான் என்பதால் பெரிய அளவில் கருத்து வேறுபாடு இல்லாமல் சமாதானம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது  அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தை இயக்கி வரும் இயக்குனர் எச்.வினோத்தின் திரைக்கதையை அஜித் திருத்தம் செய்ய கட்டாயப்படுத்துவதாக வதந்திகள் பரவி வருகிறது 
 
‘வலிமை’ படத்தின் திரைக்கதையை கிட்டத்தட்ட எட்டு முறை எச்.வினோத் மாற்றி விட்டதாகவும் ஒரு கட்டத்தில் அவர் சலிப்படைந்து இனிமேல் திருத்தம் செய்ய முடியாது என்று அவர் கறாராக அஜித்திடம் கூறி விட்டதாகவும் கூறப்படுகிறது. அஜித் மற்றும் எச்.வினோத் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை சமாளிக்கவே போனிகபூருக்கு நேரம் சரியாக இருப்பதாகவும் இதனால் போனிகபூரும் அஜீத் மீது அதிருப்தியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஆனால் இவை எல்லாமே முழுக்க முழுக்க வதந்தி என்றும் அஜித்தும் எச்.வினோத்தும் இணைந்து சுறுசுறுப்பாக இந்த படத்தில் பணியாற்றி வருவதாகவும் இன்னொரு தரப்பினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் திடீர் மாற்றம்: பெரும் பரபரப்பு