Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

6 மணிக்காக காத்திருக்கும் அஜித், விஜய் ரசிகர்கள்

6 மணிக்காக காத்திருக்கும் அஜித், விஜய் ரசிகர்கள்
, வெள்ளி, 21 ஜூலை 2017 (16:01 IST)
அஜித் படத்தின் பாட்டு மற்றும் விஜய் படத்தைப் பற்றிய அறிவிப்பு இரண்டும் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதால், இருவரின் ரசிகர்களும் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.


 


சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘விவேகம்’. காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், அக்ஷரா ஹாசன் மற்றும் விவேக் ஓபராய் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கெனவே ரிலீஸாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில், மூன்றாவது பாடலான ‘காதலாட’ லிரிக் வீடியோ, இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தைப் பற்றிய முக்கிய அறிவிப்பு, இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தெரிவித்துள்ளது. எனவே, அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள், 6 மணிக்காகக் காத்திருக்கின்றனர்.


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ் படம் தள்ளிப்போனது ஏன்? தவிக்கும் ரசிகர்கள்