Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடா முயற்சி படத்தின் லுக் டெஸ்ட்… வெளிநாட்டுக்கு சென்ற அஜித் & மகிழ் திருமேனி!

விடா முயற்சி படத்தின் லுக் டெஸ்ட்… வெளிநாட்டுக்கு சென்ற அஜித் & மகிழ் திருமேனி!
, வியாழன், 8 ஜூன் 2023 (08:05 IST)
துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.

இதற்குக் காரணம் லைகா நிறுவனத்தில் நடந்த ரெய்ட்டால் அந்த நிறுவனத்துக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டதுதான் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது மகிழ் திருமேனி அஜித்தோடு வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாகவும், அங்கு அஜித்தின் லுக் டெஸ்ட் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லுக் டெஸ்ட் முடிந்து இருவரும் சென்னை வந்ததும் ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது. விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் பல்வேறு நாடுகளில் நடக்கும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்புவுக்கு தொடங்கிய சிக்கல்… கொரோனா குமார் பஞ்சாயத்தை இழுத்த ஐசரி கணேஷ்!