Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எல்லோரிடமும் மைக்கை நீட்டிக் கருத்து கேட்கிறார்கள்.. அஜித் அதிருப்தி!

Advertiesment
எல்லோரிடமும் மைக்கை நீட்டிக் கருத்து கேட்கிறார்கள்.. அஜித் அதிருப்தி!

vinoth

, சனி, 18 ஜனவரி 2025 (14:37 IST)
நடிகர் அஜித் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் கார் ரேஸ் பந்தயங்களில் ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்ளார். இனிமேல் ஆண்டுக்கு ஒரு படம் நடித்துவிட்டு ஆறு மாத காலம் ரேஸ்களில் அவர் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்காக அவர் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.

இதையடுத்து துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் அஜித்தின் “அஜித்குமார் ரேஸிங்” அணி மூன்றாவது இடத்தை பெற்றதையடுத்து அஜித்துக்கும் அவரது அணிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அஜித்தின் சக நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவரை வாழ்த்தினர்.

இதையடுத்து பல ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் நேர்காணல்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளார். அப்படி அவர் அளித்த ஒரு நேர்காணலில் “ இப்போது எல்லோரிடமும் சென்று மைக்கை நீட்டி  கருத்துக் கேட்கிறார்கள். ஆனால் அந்த நபருக்கு அந்த விஷயத்தைப் பற்றி கருத்து சொல்ல தகுதியானவரா எனப் பார்ப்பதில்லை. இது சம்மந்தமாக ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடாமுயற்சி படத்தின் லாபத்தில் பங்கு… லைகா நிறுவனத்தை வைத்து செய்த ஹாலிவுட் பட நிறுவனம்!