Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னப்பா மறுபடியும் குழப்புறீங்க… அஜித்தின் புகைப்படத்தைப் பகிர்ந்த விக்னேஷ் சிவன்!

என்னப்பா மறுபடியும் குழப்புறீங்க… அஜித்தின் புகைப்படத்தைப் பகிர்ந்த விக்னேஷ் சிவன்!
, திங்கள், 13 பிப்ரவரி 2023 (08:22 IST)
அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் ட்விட்டரில் தன்னுடைய பயோவில் “அஜித் 62 இயக்குனர்” என்ற டேக்கை நீக்கி இருந்தார். அதன் பின்னர் இப்போது தன்னுடைய ப்ரொபைல் புகைப்படமாக அஜித் புகைப்படத்தை வைத்திருந்ததையும் நீக்கியுள்ளார்.

இந்நிலையில் இப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் சிரிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் மறுபடியும் குழப்பமடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமா விமர்சகரை மணந்த இயக்குனர் பி எஸ் மித்ரன்!