Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் 61 படத்தின் அடுத்த கட்ட ஷுட்டிங் எப்போது? மஞ்சு வாரியர் கொடுத்த அப்டேட்!

அஜித்
Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (14:54 IST)
அஜித் 61 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என மஞ்சுவாரியர் பேசியுள்ளார்.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

இந்த படம் முதலில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கபப்ட்ட நிலையில் பின்னர் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மேலும் தாமதம் ஆகி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில் ரிலீஸாகும் விஜய்யின் வாரிசு திரைப்படத்தோடு மோதும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் அஜித் 61 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கும் என நடிகை மஞ்சுவாரியர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’எம்புரான்’ சர்ச்சை காட்சிகள்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்..!

ரொனால்டினோவை சந்தித்த அஜித் மகன் ஆத்விக்.. தலையை தடவி கொடுத்து ஆசி..!

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments