Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி, அஜித், விஜய்க்காக தினமும் கடவுளை வேண்டுகிறேன். ஐஸ்வர்யா ராஜேஷ்

Advertiesment
, வெள்ளி, 12 மே 2017 (23:29 IST)
ஒரு நடிகை இளம் வயதில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க பெரும் துணிச்சல் வேண்டும். அப்படி ஒரு துணிச்சலை வரவழைத்து 'காக்கா முட்டை' படத்தில்  நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அம்மா கேரக்டரில் நடித்துவிட்டால் அதன் பின்னர் தொடர்ந்து அம்மா கேரக்டரே வரும் என பலர் பயமுறுத்தினாலும், அந்த கேரக்டரின் வலிமையை புரிந்து நடித்த ஐஸ்வர்யாராய்க்கு விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த பாராட்டுக்கள் பல



 


இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக பெரிய வாய்ப்புகள் எதுவும் இன்றி இருந்த ஐஸ்வர்யாராய்க்கு தற்போது படங்கள் குவிந்து வருகிறது. தனுஷூடன் 'வடசென்னை', விக்ரமுடன் 'துருவ நட்சத்திரம்' என பிசியாக உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்,.

இருப்பினும் ஐஸ்வர்யாவுக்கு ரஜினி, அஜித், விஜய் படங்களில் ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்பது பெரும் கனவாம். இதற்காக அவர் தினமும் கடவுளை வேண்டி வருவதாக கூறியுள்ளார். ஐஸ்வர்யாவின் ஆசை விரைவில் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்க அப்பா கதையைவா படம் எடுக்க போறிங்க! ரஜினிக்கு ஹாஜி மஸ்தான் மகன் மிரட்டல்