கோலிவுட் திரையுலகில் முன்னேறி கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தனது திறமையான நடிப்பினால் இயக்குனர்களின் நடிகை என்ற பெயரை எடுத்துள்ளார்.
இந்த நிலையில் நடிகையும் இயக்குனருமான லட்சுமிராமகிருஷ்ணன் இயக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம்
இந்த படத்திற்கு 'ஹவுஸ் ஓனர்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது
வாடகை வீட்டிலேயே காலந்தள்ளூம் அசோக் செல்வன் - ஐஸ்வர்யா ஜோடி சென்னையில் புதிய வீடு வாங்கும் முயற்சியில் இருப்பதாகவும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சந்திப்பதே இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஜாமோன் ஜான் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது