Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாத்தான்குளம் விவகாரம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ், வரலட்சுமி டுவிட்

Advertiesment
ஐஸ்வர்யா ராஜேஷ்
, வெள்ளி, 26 ஜூன் 2020 (19:38 IST)
சாத்தான்குளம் விவகாரம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ், வரலட்சுமி டுவிட்
சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை மகன் வியாபாரிகள் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் திடீரென அவர்கள் மர்மமாக மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி தற்போது அகில இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது என்பதும் ராகுல் காந்தி உள்பட பல அகில இந்திய அரசியல் தலைவர்கள் இதுகுறித்து தங்களுடைய சமூக வலைதளங்களில் ஆபாசமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் எப்போதும் இல்லாத அளவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலர் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் வரலட்சுமி ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது:
 
ஐஸ்வர்யா ராஜேஷ்: சாத்தான்குளம் சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது என்றும் முழுக்க முழுக்க இது ஒரு மனிதத் தன்மையற்ற செயல் என்றும் அவர்களுக்கான நீதி தாமதமானால் அநீதியானது 
 
வரலட்சுமி: ‘சாத்தான்குளம் காவல் துறையினரின் நடத்தையைப் பார்த்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும். அதே நேரத்தில் இந்த சம்பவத்தை வைத்து நாம் ஒட்டுமொத்த காவல்துறையையும் குறைகூற முடியாது. ஆனால் அந்த இரண்டு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாத்தான்குளம் விவகாரத்தில் இவர்களும் குற்றவாளிகள் தான்: உதயநிதியின் ஆவேச டுவீட்