Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமலின் இந்தியன் 2 படத்திலிருந்து விலகிவிட்டு - கூலாக காரணம் சொன்ன நடிகை!

Advertiesment
கமலின் இந்தியன் 2 படத்திலிருந்து விலகிவிட்டு - கூலாக காரணம் சொன்ன நடிகை!
, புதன், 25 செப்டம்பர் 2019 (17:42 IST)
ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமான இயக்குனர் ஷங்கர் இயக்கும் 14வது படம் இது. பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் தாயாருக்கும் இப்படம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது 



 
கமல், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் , ரகுல் ப்ரீத் சிங் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடிக்கவுள்ளதாக அடிக்கடி செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தது. ஆனால், சமீபத்தில் பேட்டி ஒன்றில்  பேசியுள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தான் இந்திய 2 படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறியுள்ளார். 
 
அதற்கான காரணத்தை கூறியுள்ள அவர், “ இந்தியன் 2 படத்தில் நடிக்க கடந்த டிசம்பர் மாதமே ஒப்பந்தமானேன். ஆனால்,  கடந்த ஆகஸ்ட் மாதம் தான் படப்பிடிப்பு ஆரம்பித்தது. அதனால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது மிகுந்த வருத்தமளிக்கிறது. பிரம்மாண்டமான வரலாற்று படத்தில் கமல் ஹாசன் ,ஷங்கர் என இரண்டு ஜாம்பவான்களுடன் நடிக்கமுடியாமல் போனதால் இரண்டு நாட்களாக தூக்கம்  வரவில்லை என கூறியுள்ளார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் " இப்போது கூலாக காரணத்தை சொல்லிடீங்க, ஆனால் பின்னாளில் நிச்சயம் மிகுந்த மன வருத்தப்படுவீர்கள் என கூறிவருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் கவின்? - வீடியோ!