உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் அதை தொடர்ந்து இந்தியில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். அதேசமயம் விவேக் ஓபராய், சல்மான் கான் உள்ளிட்டோருடனான காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார். பின்னர் கடந்த 2007ம் ஆண்டில் ஐஸ்வர்யா ராய் பிரபல நடிகரும், அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகளும் உள்ளார். நல்லவிதமாக சென்றுக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் குடும்ப வாழ்வில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாக ஐஸ்வர்யா ராய், தன்னுடைய மகள் ஆராத்யாவுடன் தனியாக வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர் வந்த அவரின் பிறந்தநாளைக் கூட பச்சன் குடும்பம் கொண்டாடவில்லை.
இந்நிலையில் இப்போது ஒரு பார்ட்டியில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டுள்ளனர். மேலும் அந்த பார்ட்டியில் இருவரும் ஜோடியாக செல்ஃபி எல்லாம் எடுத்துக்கொண்டு விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.