Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மர்மதேசம் சீரியல் இயக்குநரின் புதிய வெப்தொடர்! நாளை ஓடிடியில் ரிலீஸ்..!

Siva
வியாழன், 24 அக்டோபர் 2024 (20:48 IST)
நடிகை சாய் தன்ஷிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள "ஐந்தாம் வேதம்" என்ற வெப்தொடர் நாளை அதாவது அக்டோபர் 25ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது. 
 
திகில் மற்றும் மாயம் கலந்த கதைகள் எப்போதும் மக்களிடம் பரவலான வரவேற்பை பெற்றுவந்தன. இதனைத்தொடர்ந்து, 90களில் பெரும் புகழ் பெற்ற திகில் தொடர் "மர்மதேசம்" ஒளிபரப்பாகியது. இத்தொடருக்கு நாகா இயக்குநராக இருந்தார், அதில் சேத்தன் மற்றும் தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
 
அதன்பின், நாகா "வீட்டுக்கு வீடு", "லூட்டி", "யாமிருக்க பயமேன்", "ரமணி Vs ரமணி" போன்ற தொடர்களை வெற்றிகரமாக இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தமிழ் சினிமாவில், "ஆனந்தபுரத்து வீடு" படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமான நாகா, தற்போது தனது புதிய இணையத் தொடர் "ஐந்தாம் வேதம்" மூலம் திரும்பியிருக்கிறார்.
 
இந்த தொடரில், சாய் தன்ஷிகா முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். அபிராபி மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தொடரில், பொன்வண்ணன், தேவதர்ஷினி, ராம்ஜி, சந்தோஷ் பிரதாப், மற்றும் ஒய்.ஜி. மகேந்திரன் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள "ஐந்தாம் வேதம்" தொடர் ஜீ5 தமிழ் ஓடிடி தளத்தில் நாளை   வெளியிடப்படவுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் அடுத்த படம் தொடங்குவது எப்போது?... வெளியான தகவல்!

விக்ரம்மை வைத்து இயக்க இருந்த படம் என்ன ஆனது?... பிரேம்குமார் பகிர்ந்த தகவல்!

பாடலைப் பயன்படுத்த அனுமதிக் கேட்ட புதுமுக இயக்குனர்… காசே வாங்காமல் ஒரு ஃபோனையும் பரிசாகக் கொடுத்த TR!

என்ன ஆனது வினாயக் சந்திரசேகர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்த படம்?

வெற்றியால் தலைக்கனம் வந்துவிடக் கூடாது… லோகோ வெற்றிக்குப் பின் மகளுக்கு இயக்குனர் பிரியதர்ஷன் அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments