இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ”அக்னி நட்சத்திரம்” என்ற பெயரில் தற்போது ஒரு திரைப்படம் தயாராகவுள்ளது. அது மணி ரத்னம் இயக்கிய திரைப்படத்தின் ரீமேக்கா என்று பார்க்கலாம்.
1988 ல் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் அக்னி நட்சத்திரம். இந்த திரைப்படத்தை பிரபல திரைப்பட இயக்குனர் மணி ரத்னம் இயக்கினார். கார்த்திக்-பிரபு ஆகியோர் கதாநாயகர்களாக நடித்தனர்.
இந்நிலையில் “அக்னி நட்சத்திரம்” என்ற பெயரில் மீண்டும் ஒரு திரைப்படம் உருவாகிறது. இந்த திரைப்படத்தில் மைனா திரைப்பட புகழ் விதார்த் மற்றும் பிரபல நடிகர் உதயா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க உள்ளனர். ஆனால் மணி ரத்னம் திரைப்படத்திற்கும் இந்த திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறப்படுகிறது.
இத்திரைப்படம் ஒரு திரில்லர் திரைப்படம் என கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சரண் இயக்கவுள்ளார். ஒய் ஆர் பிரசாத் என்பவர் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். எல்.கே.விஜய் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இத்திரைப்படத்தின் படபிடிப்பு இன்னும் சில நாட்களில் துவங்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.