Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி ஆடியோ கேட்டதும் கொரோனா நெகட்டிவ்: ரசிகரின் நெகிழ்ச்சியான டுவீட்

Advertiesment
ரஜினி ஆடியோ கேட்டதும் கொரோனா நெகட்டிவ்: ரசிகரின் நெகிழ்ச்சியான டுவீட்
, வியாழன், 17 செப்டம்பர் 2020 (17:29 IST)
ரஜினி ஆடியோ கேட்டதும் கொரோனா நெகட்டிவ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர் ஒருவர் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தான் இனிமேல் பிழைக்க மாட்டேன் என்று எண்ணி ரஜினிக்கு ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும், தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீர நடைபோட்டு அடித்தட்டு மக்களின் தனிநபர் வருமானம் 25 ஆயிரம் என்ற நிலை உருவாக்கி கொடு. உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்
 
இந்த நிலைய்ல் ரஜினிகாந்த் இந்த ட்விட்டை பார்த்ததும் அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் நீங்கள் நிச்சயம் நலமாக திரும்புவீர்கள் என்றும் உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்றும் நலமுடன் வீடு திரும்பியவுடன் உங்களை நான் சந்திக்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் என்றும் எனது வீட்டுக்கு வாருங்கள் என்றும் தெரிவித்திருந்தார் 
 
இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் அந்த ரசிகர் அந்த ஆடியோவை கேட்டுள்ளார். அந்த ஆடியோவை கேட்டதும் அவருக்கு சில மணி நேரங்களில் கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாக தெரிகிறது
 
இதனை அடுத்து அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது: ஆசிர்வாதம் கிடைத்தது, அதிசயம் நடந்தது அற்புதம் நிகழ்ந்தது. கொரோனா நெகடிவ் வந்தது. தலைவர் காவலர்களின் பிரார்த்தனையால் எனது கிட்னியும் சரி ஆகி மீண்டும் பழைய நிலைக்கு வருவேன். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சின்சியாங்கில் சுதந்திரமாக வேலை செய்யும் உள்ளூர் மக்கள்!