Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் முடிந்த அடுத்த வாரமே குக் வித் கோமாளி: தேதி அறிவிப்பு!

Advertiesment
cooku1
, திங்கள், 23 ஜனவரி 2023 (14:10 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று முடிவடைந்த நிலையில் இந்த வாரம் சனிக்கிழமை முதல் குக் வித் கோமாளி நான்காவது சீசன் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளன. 
 
பிக் பாஸ் நிகழ்ச்சி 105 நாட்களாக நடந்த நிலையில் நேற்றுடன் முடிவடைந்தது என்பதும் அசீம் டைட்டில் வின்னர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் குக் வித் கோமாளி மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில் வரும் சனிக்கிழமை முதல் அதாவது ஜனவரி 28 முதல் 4வது சீசன்  ஒளிபரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சீசனின் கோமாளிகளாக  மணிமேகலை, ஜி.பி முத்து, சிங்கப்பூர் தீபன், சுனிதா, மோனிஷா, ரவீனா மற்றும் ஓட்டேரி சிவா  ஆகியோர் அறிவிக்கப்பட்ட நிலையில் பாலா புகழ் சிவாங்கி போன்றவர்களும் இடம் பெறுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெர்சல் படத்தை மிஞ்சிய வாரிசு - இருந்தும் என்ன லாபம்? புலம்பும் தயாரிப்பாளர்!