Webdunia - Bharat's app for daily news and videos

Install App

22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையிடபட்ட ஆளவந்தான்!!

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (17:58 IST)
22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையிடபட்ட ஆளவந்தான் திரைப்படம்; இரண்டு தலைமுறை ரசிகர்களும் ஆட்டம் பாட்டதுடன் திரைப்படத்துக்கு உற்சாக வரவேற்பு.


கடந்த 2001 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஆளவந்தான். இந்த படத்தில் கமல்ஹாசன் நாயகனாகவும், வில்லனாகவும் இரட்டை வேடத்தில் நடத்த படம்  கடந்த 8ம் தேதி மீண்டும் 22 ஆண்டுகளுக்கு பிறகு உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியானது.

ஞாயிற்றுக் கிழமை மதுரை பழங்கானத்தம் பகுதியில் உள்ள APR ஜெயம் திரையரங்கில் ரசிகர்கள் ஆட்டம் ஆடி பட்டாசு வெடித்து கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். இரண்டு தலைமுறை ரசிகர்களும்  கமலஹாசனின் பாடலுக்கு ஆட்டம் அடி கொண்டாடி மகிழ்ந்த வேலையில், ஒரு ரசிகர் வெல்டிங் வைப்பதற்கு பயன்படுத்துவதற்கு உபகரணத்தை கொண்டு தீ பற்ற வைத்து கொண்டாடினர்.

ஒரு சில ரசிகர்கள் தரையில் உருண்டு புரல - ரசிகர்கள் ஒருவரோடு ஒருவர் முண்டியிட்டு உள்ளே சென்றனர். இதனிடையே திரையரங்கிற்கு வந்த நடிகர் ரோபோ சங்கர் திரையரங்க வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கமலஹாசன் உருவப்படம் பெறிக்கப்பட்ட படத்திற்கு மாலை அணிவித்து சுடும் காட்டி தேங்காய் உடைத்தார்.

அவர் தொடர்ந்து ரசிகர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்து தனது குடும்பத்துடன்  படத்தை பார்த்து ரசித்து வந்தார். தொடர்ந்து ரோபோ சங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்;

22 ஆண்டுகள் கழித்து இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டாலும் இன்றளவும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். ஆளவந்தான் நந்து போல நான் முதன்முதலில் போட்டு நடனமாடிய போது பயன்படுத்தப்பட்ட கண்ணாடி இன்றும் வைத்திருக்கின்றேன் மதுரை ரசிகர்கள் இன்றளவும் மாறவில்லை பாசக்காரர்களாக அதே ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments