சரியான பட வாய்ப்புகள் இல்லாததால், காற்று வெளியிடை படத்தில் நடித்த அதிதி ராவ், மும்பைக்கே மூட்டை கட்டிக் கொண்டு போய் விட்டதாக கூறப்படுகிறது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில், நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை அதிதி ராவ். இந்த படம் வெளியானதும், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனக்கு வாய்ப்பு குவியும் என்ற கனவில் இருந்தாராம்.
தனக்கென தனி மேனேஜர் மற்றும் சென்னையில் வீடு என்ற கனவில் இருந்தவருக்கு, படத்தில் ரிசல்ட் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இவரை ஒப்பந்தம் செய்ய எந்த தயாரிப்பாளரும் வராத நிலையில், காத்திருந்து காத்திருந்து கடுப்பான நடிகை, தற்போது மும்பைக்கே மூட்டை கட்டி விட்டாராம்.