ஷூட்டிங்கின்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவல் லத்திகா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இப்படத்திற்குப் பின் முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், வனிதா விஜயகுமாருடன் இணைந்து தற்போது பவர் ஸ்டார் சீனிவாசன் பிக்கப் டிராப் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கின்போது, மயங்கி விழுந்த பவர் ஸ்டார் சீனிவாசனை படக்குழுவினர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.