Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’விருமன்’ படப்பிடிப்பு குறித்த அப்டேட் தந்த ஷங்கரின் மகள்!

’விருமன்’ படப்பிடிப்பு குறித்த அப்டேட் தந்த ஷங்கரின் மகள்!
, புதன், 22 டிசம்பர் 2021 (12:45 IST)
பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் விருமன் என்ற திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் அந்த படத்தின் முக்கிய அப்டேட்டை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
கார்த்திக் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகிவரும் அதிரடி ஆக்சன் திரைப்படம் ’விருமன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்றும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் ’விருமன்’ திரைப் படத்தில் கார்த்தி ஜோடியாக நாயகியாக நடித்து வரும் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக கூறி படக்குழுவினருடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்
 
மேலும் தான் நடிகையாக வேண்டும் என்ற கனவு இந்த படத்தின் மூலம் நிறைவேறிவிட்டதாகவும் படக்குழுவினர்கள் அனைவருக்கும் தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய கூழாங்கல்! விக்னேஷ் சிவன் வருத்தம்!