Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவின் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் பிரபாஸின் ஆதிபுருஷ்!

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2023 (15:22 IST)
பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இதிகாச படம் ஆதிபுருஷ். இதில் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். இந்தி நடிகர் சயிப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார். இந்த படத்தை தன்ஹாஜி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஓம் ராவத் இயக்கியுள்ளார். இந்த படம் பேன் இந்தியா படமாக இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டீசர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. படம் முழுவதும் மோஷன் கேப்சரிங் முறையை பயன்படுத்தி அனிமேசன் படமாக எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை அனிமேஷன் படமாக எடுக்காமல் லைவ் ஆக்‌ஷனாக எடுத்திருக்கலாம் என்ற எண்ணத்தை பலர் பதிவு செய்துள்ளனர். இந்த படத்தின் அனிமேஷன் தரம் ஈர்க்கும் வகையில் இல்லை என கூறியுள்ள ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #DisappointingAdipurish என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு, இப்போது மீண்டும் அனிமேஷன் பணிகள் நடந்துவருகின்றன.

அமெரிக்காவின் நியுயார்க் நகரில் நடக்கும் 22வது டிரிபெகா சர்வதேச பட விழாவில் பிரத்யேகமாக திரையிடப்படுகிறது. ஜூன் 7 ஆம் தேதி முதல் ஜூன் 18 ஆம் தேதி முதல் நடக்கிறது. இந்நிலையில் இந்த படம் ஜூன் 16 ஆம் தேதி இந்தியாவில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments