“மொபைலில் பார்த்தா அப்படிதான் இருக்கும்…” ஆதிபுருஷ் டீசர் ட்ரோல்கள் குறித்து இயக்குனர்!

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (09:03 IST)
பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இதிகாச படம் ஆதிபுருஷ். இதில் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். இந்தி நடிகர் சயிப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார். இந்த படத்தை தன்ஹாஜி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஓம் ராவத் இயக்கியுள்ளார்.

இந்த படம் பேன் இந்தியா படமாக இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டீசர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. படம் முழுவதும் மோஷன் கேப்சரிங் முறையை பயன்படுத்தி அனிமேசன் படமாக எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை அனிமேஷன் படமாக எடுக்காமல் லைவ் ஆக்‌ஷனாக எடுத்திருக்கலாம் என்ற எண்ணத்தை பலர் பதிவு செய்துள்ளனர். இந்த படத்தின் அனிமேஷன் தரம் ஈர்க்கும் வகையில் இல்லை என கூறியுள்ள ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #DisappointingAdipurish என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ட்ரோல்களுக்கு பதிலளித்துள்ள இயக்குனர் ஓம் ராவத் “இந்த திரைப்படம் பெரிய திரையில் காணும் அனுபவத்துக்காக உருவாக்கப்படுகிறது. மொபைல் போன்ற சிறிய திரைகளில் அந்த அனுபவம் கிடைக்காது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் ராஷி கண்ணா!

மாஸ்க் படத்துக்கு இன்னும் ஜி வி க்கு சம்பளம் தரவில்லை… வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

இயக்குனர் பாரதி கண்ணனை மிரட்டினார்களா கார்த்திக்கின் ரசிகர்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments